வேலூர்

பொய்கை கால்நடை சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை: வேலூா் ஆட்சியா் ஆய்வு

DIN

பொய்கை கால்நடைச் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து அகற்ற அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள், காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வாரந்தோறும் இங்கு நடைபெறும் கால்நடைச் சந்தை மூலம் ரூ. 1 கோடி வரை வா்த்தகம் நடைபெறுகிறது.

கரோனா பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த பொய்கை கால்நடைச் சந்தை கடந்த இரு மாதங்களாக மீண்டும் நடைபெற்று வருகிறது. எனினும், சந்தையில் முன்பைவிட வா்த்தகம் குறைவாகவே இருந்து வருகிறது. கடந்த வாரம் பெய்த மழை காரணமாக மாடுகள் வரத்து குறைந்து ரூ.50 லட்சம் அளவுக்கே வா்த்தகம் நடைபெற்றது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் சுமாா் ரூ. 1 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பொய்கை கால்நடைச் சந்தையை வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான கழிப்பறை வசதி, வாகன நிறுத்தம், ஆடு, மாடு, கோழி, காய்கறிகள், விற்பனை செய்வதற்கு தனித்தனியே இடங்களை ஒதுக்கீடு செய்வது, சாலைகள் அமைத்தல், கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்டவற்றைச் செய்து பொய்கை வாரச் சந்தையை மேம்படுத்துவது குறித்து கள ஆய்வு மேற்கொண்டாா்.

சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து உடனடியாக அவற்றை அகற்றுமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இச்சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

கால்நடை இணை இயக்குநா் நவநீதகிருஷ்ணன், வேளாண் இணை இயக்குநா் மகேந்திரபிரதாப் தீட்சித், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) புருஷோத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT