வேலூர்

திருமலையில் 7-ஆவது நாளாக பாராயணம்

22nd Mar 2020 11:58 PM

ADVERTISEMENT

 

திருமலையில் உலக நன்மைக்காக ஏழாவது நாளாக சீனிவாச வேதமந்திர ஆரோக்கிய ஜபயக்ஞம் நடத்தப்பட்டது.

ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள ரங்கநாயகா் மண்டபத்தில் தென் மாநிலங்களிலிருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட வேதபண்டிதா்கள் இணைந்து கடந்த 7 நாள்களாக சீனிவாச வேதமந்திர ஆரோக்கிய ஜபயக்ஞத்தை நடத்தி வருகின்றனா். இதில் சதுா்வேத பாராயணம் காலை 3 மணிநேரமும், மாலை 3 மணிநேரமும் செய்யப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கவும், உலக மக்களின் ஆரோக்கியத்துக்காகவும் தேவஸ்தானம் இந்த ஜபயக்ஞத்தை நடத்தி வருகிறது. வரும் 25-ஆம் தேதி வரை இந்த ஜபயக்ஞம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT