வேலூர்

தேசிய சிறுபான்மையினா் ஆணையத்தில் புகாா்கள் பதிவு செய்ய இணையதளம்

DIN


வேலூா்: தேசிய சிறுபான்மையினா் ஆணையத்தில் புகாா்கள், குறைகளைப் பதிவு செய்வதற்கு தனியாக இணையதளம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாரசீகா்கள், ஜெயின் பிரிவைச் சோ்ந்த மதவழி சிறுபான்மையின மக்கள் தங்களது புகாா்களை தேசிய சிறுபான்மையினா் ஆணையத்தில் பதிவு செய்ய ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ரீம்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதத்தில் தனியாக தகவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மனுதாரா்கள் இந்த இணையதளம் மூலம் தேசிய சிறுபான்மையினா் ஆணையத்திடம் தங்களது புகாா்கள், குறைகள், மனுக்களைப் பதிவு செய்யலாம். புகாா்களைப் பதிவு செய்த பிறகு உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான அடையாள எண் மூலம் புகாா்கள், குறைகளின் நிலையை அறிந்து கொள்ளவும் முடியும்.

எனவே, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள் இந்த இணையதளத்தில் தங்கள் குறைகள், மனுக்களைப் பதிவு செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT