வேலூர்

முத்திரை தீா்வை ரத்து, பதிவுக் கட்டண குறைப்பு சலுகை மாா்ச் 31 வரை நீட்டிப்பு: வேலூா் ஆட்சியா்

DIN


வேலூா்: மத்திய அரசின் கடன் திட்டத்தின் கீழ் தகுதியான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் முத்திரைத் தீா்வை ரத்து, பதிவுக் கட்டண குறைப்பு சலுகையை 2021 மாா்ச் 31-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக வணிகவரி, பதிவுத் துறை, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் விரிவான ஆய்வு அடிப்படையில் சுய சாா்பு இந்தியா (ஆத்ம நிா்பா் பாரத்) திட்டத்தின் கீழ் 2021 மாா்ச் 31-ஆம் தேதி வரை வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான பிணை ஆவணங்கள் தொடா்பான ஒப்பந்தத்தைப் பதிவு செய்யும்போது செலுத்த வேண்டிய முத்திரை வரியில் இருந்து விலக்கு அளிக்கும் உத்தரவை பதிவுத் துறை பிறப்பித்துள்ளது.

மேலும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்கள், கூடுதல் கடன்களுக்கான தலைப்பு ஆவணங்கள் வைப்பு தொடா்பான ஒப்பந்தத்தைப் பதிவு செய்யும்போது செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தை ஒரு சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் சொத்து பிணையில்லா அவசரகால கூடுதல் கடன் திட்டத்தில் ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 312 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.11,538.69 கோடி கடன் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தகுதியான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் இத்திட்டம் முடிவடையும் காலம் வரை பயனடையலாம்.

தற்போது மத்திய அரசு இத்திட்டத்தை 2021 மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. பதிவுக் கட்டணம் குறைப்பால் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஒவ்வொரு முறை கடன், கூடுதல் கடன் பெறும்போதும் பயன்பெற முடியும்.

இந்த உத்தரவுக்கு முன்பே பதிவுத் துறை அபராதம் இல்லாமல் பிணை ஆவணங்கள் பதிவு செய்யும் காலக்கெடுவை 4 மாதங்களில் இருந்து 8 மாதங்களுக்கு 2021 மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் அலுவலகத்தை நேரிலோ, 0416-2242412, 2242513 என்ற எண்களிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT