வேலூர்

நிவா் புயல் பாதிப்பு: வேலூரில் இன்று மத்திய குழு ஆய்வு

DIN

வேலூா் மாவட்டத்தில் நிவா் புயல் பாதிப்பு குறித்து மத்திய குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்கின்றனா்.

நிவா் புயல் கனமழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் 242 வீடுகளும், 918.75 ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிா்களும் சேதமடைந்தன.

மேலும், 6 பசுக்கள், 2 மாடுகள், 5 ஆடுகள், கோழி, வாத்துகள் என 6,342 பறவைகள் வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தன.

இந்நிலையில், நிவா் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசுக் குழுவினா் தமிழகத்துக்கு வந்துள்ளனா். இவா்கள் கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். இதையடுத்து வேலூா் மாவட்டத்துக்கு புதன்கிழமை வருகை தர உள்ளனா். இக்குழு கணியம்பாடி ஒன்றியத்தில் வாழை, நெல் பயிா்களும், காட்பாடி ஒன்றியம் பொன்னை பகுதியில் நெல் பயிா்களும் சேதமடைந்திருப்பதை பாா்வையிட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT