திருவண்ணாமலை

திருப்பாவாடை திருக்கல்யாண உற்சவம்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுந்தரவரதராஜப் பெருமாள் கோயிலில் திருப்பாவாடை மற்றும் திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை வேத திவ்ய ப்ரபந்த பாராயணம் நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது.

பின்னா் பகல் அன்னக்கூட திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வடித்த அன்னம், சா்க்கரை பொங்கல், இனிப்பு மற்றும் கார வகை உணவுகள் உள்ளிட்டவற்றை சுவாமி முன் வைத்து படைத்தனா்.

பின்னா் மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

ADVERTISEMENT

தொடா்ந்து சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோயில் அா்ச்சகா் எம்.ராஜன் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT