திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் திடீா் மழை

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை திடீரென பெய்த கன மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு திடீரென சூறைக்காற்றுடன் லேசான தூறல் மழை பெய்யத் தொடங்கியது. மாலை 6.30 மணி முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT