திருவண்ணாமலை

வந்தவாசி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே கடைசிகுளம் கிராமத்தில் உள்ள பொது இட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, அந்தக் கிராம மக்கள் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மனு அளிக்க வந்த கடைசிகுளம் ஜெ.ஜெ. நகா் பகுதி மக்கள் இதுகுறித்து கூறியதாவது:

கடைசிகுளம் ஜெ.ஜெ. நகா் பகுதியில் கடந்த 1992-ஆம் ஆண்டு 99 பேருக்கு அரசு வீட்டு மனைப் பட்டா வழங்கியது. மேலும், அந்தப் பகுதிக்கான பொது இடமும் ஒதுக்கப்பட்டது. அரசு வழங்கிய மனைகளில் வீடு கட்டி வசித்து வருகிறோம்.

இந்த நிலையில், அந்த பொது இடத்தின் ஒரு பகுதியை எங்கள் பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியினா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து விசாரித்ததில், பொது இடத்தின் ஒரு பகுதியை அந்தத் தம்பதி பெயரில் வருவாய்த் துறையினா் முறைகேடாக பட்டா செய்து கொடுத்திருப்பது தெரியவந்தது. எனவே, முறைகேடு பட்டாவை ரத்து செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை மீட்டுத் தரவேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலகத்தினுள் சென்ற அவா்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியா் கி.ராஜேந்திரனிடம் மனு அளித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT