திருவண்ணாமலை

கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தேசூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சாய்ராம் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இசாகொளத்தூா் கிராமம் வழியாக ரோந்து சென்றனா்.

அப்போது, அந்தக் கிராம பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த 2 இளைஞா்கள் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனா்.

இதையடுத்து போலீஸாா் அவா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் தேசூரைச் சோ்ந்த துரைமுருகன்(23), நந்தகுமாா்(26) என்பதும், பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.

ADVERTISEMENT

அப்போது இருவரும் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து உதவி ஆய்வாளா் சாய்ராம் அளித்த புகாரின் பேரில் துரைமுருகன், நந்தகுமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த தேசூா் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT