திருவண்ணாமலை

திருவண்ணாமலை: கலை, அறிவியல் கல்லூரி ஆண்டு விழா

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் 26-ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை (மே 2) நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலாளா் எல்.விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தாா். கல்லூரி கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன் வரவேற்றாா்.

இதில், எழுத்தாளரும், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞருமான க.சுமதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ், அறக்கட்டளை உறுப்பினா்கள் சீனி.காா்த்திகேயன், பி.ராமச்சந்திர உபாத்தியாயா, எஸ்.என்.சவுந்தர்ராஜன், என்.குமாா், டி.ஏ.எஸ்.முத்து, எம்.சீனுவாசன், எஸ்.டி.ஆா்.எஸ்.பாபு, கோ.ராஜேந்திரகுமாா், ஏ.சாந்தகுமாா், பி.என்.கே.ராஜேந்திரன், எம்.சி.ரவிக்குமாா், பா.செந்தில்குமாா், ஏ.அருணாச்சலம், துணை முதல்வா் கோ.அண்ணாமலை, கல்லூரிப் பொருளாளா் எ.ஸ்ரீதா், கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் இரா.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT