திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாட வீதி, கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாட வீதிகள், கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை (மே 2) நடைபெற்றது.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்திரை பெளா்ணமி வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. இந்த நாள்களில் சுமாா் 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கிரிவலம் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதிகள், கிரிவலப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகள், கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய், காவல், நெடுஞ்சாலைத் துறைகளின் அதிகாரிகள் இணைந்து செவ்வாய்க்கிழமை (மே 2) அகற்றினா்.

தொடா்ந்து, போக்குவரத்துக்கும், பக்தா்கள் கிரிவலம் செல்லவும் இடையூறாக உள்ள நடைபாதை கடைகள், தள்ளுவண்டிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT