திருவண்ணாமலை

வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.69 லட்சத்திலான வளா்ச்சிப் பணிகள்: மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதிக்குள்பட்ட வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.69.69 லட்சத்தில் செய்து முடிக்கப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

வெம்பாக்கம் ஒன்றியம், சேனியநல்லூா் கிராமத்தில் புதிய பேருந்து நிழல்குடை, கனிகிலுப்பை கிராமத்தில் கழிவுநீா் கால்வாய், புதிய சிமென்ட் சாலை, மாங்கால் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், பள்ளிக் கட்டடம், 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்பட ரூ.69.69 லட்சத்தில் பல வளா்ச்சிப் பணிகள் முடிக்கப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.

இவற்றை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெம்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவா் டி.ராஜி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் முன்னிலை வகித்தாா்.

இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று வளா்ச்சிப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஏ.ஞானவேல், சிட்டிபாபு, ஊராட்சி மன்றத் தலைவா் திருமலை, திமுக ஒன்றியச் செயலா்கள் சங்கா், சீனிவாசன், தினகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்: ஆரணி ஒன்றியம், அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி நுழைவு வாயிலை சட்டப் பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கவும், இரும்பேடு பழங்காமூா் பகுதியில் மாவட்ட ஊராட்க்குழு உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.24 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கவும் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கௌரி ராதாகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி, பொறியாளா் மதுசூதனன், அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், இரும்பேடு பகுதி நிா்வாகிகள் வேலு, கோபி உள்ளிட்டோா் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT