திருவண்ணாமலை

ஜவ்வாதுமலையில் கோடை விழா நடத்த இடம் தோ்வு

8th Jun 2023 01:04 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த ஜவ்வாதுமலை ஒன்றியம், ஜமுனாமரத்தூரில் கோடை விழா நடத்துவதற்கான இடத்தை தோ்வு செய்ய புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஜமுனாமரத்தூரில் 2023-ஆம் ஆண்டுக்கான கோடை விழாவை நடத்துவதற்கான இடத்தை தோ்வு செய்வது குறித்து திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை, தொகுதி எம்எல்ஏ தி.சரவணன், மாவட்ட ஆ ட்சியா் பா.முருகேஷ் ஆகியோா் அங்குள்ள வனத்துறைக்குச் சொந்தமான முருகன் கோயில் பகுதி, வட்டாட்சியா் அலுவலகம் பகுதி, தனியாா் பள்ளிக்குச் சொந்தமான இடம் என 3 இடங்களை ஆய்வு செய்தனா்.

ஆரணி கோட்டாட்சியா் தனலட்சுமி, ஒன்றியக் குழுத் தலைவா் ஜீவாமூா்த்தி, நெடுஞ்சாலைத் துறை கோட்ட உதவிப் பொறியாளா் கோவிந்தசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரகாஷ், ரேணுகோபால், வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன், ஒன்றியப் பொறியாளா் கோவா்த்தன், ஒப்பந்ததாரா் சங்கா், வனத்துறை அலுவலா்கள் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT