திருவண்ணாமலை

செய்யாறு அரசு ஐ.டி.ஐ.யில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க ஜூன் 7 கடைசி நாளாகும்.

இந்தத் தொழில்பயிற்சி நிலையத்தில் எலெக்ட்ரிஷியன் (மின்சாரப் பணியாளா்) - பத்தாம் வகுப்பு தோ்ச்சி,

2 ஆண்டுகள் படிப்பு, எலக்ட்ரானிக் மெக்கானிக் (கம்மியா் மின்னணுவியல்) - பத்தாம் வகுப்பு தோ்ச்சி,

2 ஆண்டுகள் படிப்பு, ஆபரேட்டா் அட்வான்ஸ்டு மெக்கானிக் டூல்ஸ் (மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குபவா்) - பத்தாம் வகுப்பு தோ்ச்சி, 2 ஆண்டுகள் படிப்பு, வெல்டா் (பற்ற வைப்பாளா்) - எட்டாம் வகுப்பு தோ்ச்சி, ஓராண்டு படிப்பு என பாடப் பிரிவுகள் உள்ளன.

பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, மாா்பளவு புகைப்படம், நிரந்தர

கைப்பேசி எண், இ-மெயில் ஐடி ஆகியவற்றுடன்

நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

ஐ.டி.ஐ.யில் சேரும் மாணவா்களுக்கு மாநில அரசின் சான்றிதழ், மாதம்தோறும் உதவித்தொகை (வருகை நாள்களுக்கு ஏற்ப அதிகபட்சம் ரூ.750), கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா பாடப் புத்தகம், வரைபடக் கருவிகள், விலையில்லா தையல் கட்டணத்துடன் சீருடை, காலணிகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

மேலும், முன்னணி நிறுவனங்களில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படுகிறது.

பயிற்சி முடிந்தவுடன் என்ஏசி சான்றிதழ் பெற தொழில் நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.

சோ்க்கைக் கட்டணமாக ஓராண்டு பிரிவுக்கு ரூ.185-ம், இரண்டு ஆண்டு பிரிவுக்கு ரூ.195 வீதம் செலுத்தவேண்டும்.

மேலும், தகவல் அறிய விரும்புவோா் தொழில்பயிற்சி நிலையத்தை 9444621245, 9942219959 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT