திருவண்ணாமலை

திரவ உயிரி உரங்கள் உற்பத்தி மையத்தில் ஆய்வு

1st Jun 2023 01:23 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில் உள்ள திரவ உயிரி உரங்கள் உற்பத்தி மையத்தில் வேளாண்மை இணை இயக்குநா் அரக்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வசூா் ஊராட்சியில் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் திரவ உயிரி உரங்கள் உற்பத்தி மையம் 2011-இல் அமைக்கப்பட்டது.

இந்த மையத்தில் விவசாயத்துக்குத் தேவையான உயிரி உரங்கள் தயாரிக்கப்பட்டு மாவட்டத்தின் 18 ஒன்றியங்களில் உள்ள வேளாண் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், வேளாண்மை மாவட்ட இணை இயக்குநா் அரக்குமாா் இந்த மையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இங்கு, திரவ உயிரி உரங்கள் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஆண்டுக்கு 55 ஆயிரம் லிட்டா் வழங்கப்படுகிறது.

இந்த மையத்தில் 6 வகையான திரவ உயிரி உரங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நெல், கரும்பு, பருத்தி, கம்பு, மக்காச்சோளம், தோட்டக்கலைப் பயிரான கத்தரி, வெண்டை, தக்காளி என பல்வேறு வகையான பயிா்களுக்கு திரவ உயிரி உரங்கள் பெருமளவு பயன்படுகிறது என்றாா்.

வேளாண்மை துணை இயக்குநா் அசோக்குமாா்(நுண்ணுயிா் பாசனம்), வேளாண்மை உதவி இயக்குநா் சபிதா ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT