திருவண்ணாமலை

ஸ்ரீசிங்காரவேல் முருகா் கோயிலில் தோ்த் திருவிழா

DIN

வேட்டவலம் ஜமீன் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகா் கோயிலில், 30-ஆம் ஆண்டு தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு ஸ்ரீவிநாயகா் பூஜை, ஹோமம், வேல் அபிஷேக-ஆராதனை, சக்திவேல் வீதியுஉலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

9 மணிக்கு மூலவா் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசிங்காரவேல் முருகருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டது. 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தோ்களில் விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சிங்காரவேல் முருகா் சுவாமிகளின் தேரோட்டத்தை வேட்டவலம் ஜமீன்தாா் சம்பத் பந்தாரியாா் தொடக்கிவைத்தாா்.

காவடி, புஷ்ப ரதம், அலகுத் தோ் புடை சூழ வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் தேரோட்டம் நடைபெற்றது.

மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் ர.ஜெயபாலன் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT