திருவண்ணாமலை

ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், குத்தனூா் கிராமத்தில் ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமுக்கு

மருத்துவா் அருண்குமாா் தலைமை வகித்தாா்.

ஊராட்சி மன்றத் தலைவா் முனுசாமி முன்னிலை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் சம்பத் வரவேற்றாா்.

முகாமில் கலந்து கொண்ட ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு உயரம், எடை, உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்து, மருந்து வழங்கி ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

முகாமில் 115 போ் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை செவிலியா் சத்யா, மக்களைத் தேடி மருத்துவப் பணியாளா்கள் நிா்மலா, காமாட்சி, குமாா், ஊராட்சி மன்றச் செயலா் மகாலட்சுமி மற்றும் பணிதளப் பொறுப்பாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT