திருவண்ணாமலை

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான விழிப்புணா்வுப் பேரணி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வட்டாரக் கல்வி மையம் சாா்பில், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணிக்கு செய்யாறு வட்டாரக் கல்வி அலுவலா்கள் புருஷோத்தமன், சத்யராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) பூச்செண்டு முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயகாந்தன் பங்கேற்று பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்தாா். இந்தப் பேரணியில் கலந்துகொண்ட பள்ளி மாணவா்கள், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியபடியும், துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கிபடியும் சென்றனா்.

இதில், செய்யாறு வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்கள் ஜெயசுதா, கண்ணன், சிறப்புப் பயிற்றுநா் மாலதி, இயன்முறை மருத்துவா் நளினி மற்றும் பள்ளி மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT