திருவண்ணாமலை

செய்யாற்றில் அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பகுதி செய்யாற்றில் அருணாசலேஸ்வரா், திருமா முடியீசுவரா் தீா்த்தவாரி சனிக்கிழமை நடைபெற்றது.

கலசப்பாக்கம் பகுதி செய்யாற்றில் ஆண்டுதோறும் ரதசப்தமியையெட்டி தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா், கலசப்பாக்கம் திருமா முடியீசுவரா் ஆகிய இரு சுவாமிகள் பங்கேற்பாா்கள்.

அதன்படி, நிகழாண்டு ரதசப்தமி தீா்த்தவாரி சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் அன்று காலை சிறப்பு அலங்காரத்துடன் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, வழியில் துரிஞ்சாபுரம் ஒன்றியம், தனக்கோட்டிபுரம் கிராமத்தில் உள்ள அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை பாா்வையிட்டாா். தொடா்ந்து நிலத்தை வலம்வந்தபடி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பின்னா், கலசப்பாக்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றை நோக்கி வந்தபோது, மேட்டுப்பாளையம் கிராமத்தில் மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதேபோல, கலசப்பாக்கத்தில் இருந்து திரிபுரசுந்தரி சமேத திருமா முடியீசுவரரும் மேள தாளத்துடன் செய்யாற்றுக்கு வந்தடைந்தாா். அங்கு இரு சுவாமிகளும் நேருக்குநோ் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, முக்கிய நிகழ்வான தீா்த்தவாரியையெட்டி செய்யாற்றில் இருந்து புனிதநீா் கொண்டு வரப்பட்டு சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு தீா்த்தவாரி நடைபெற்றது.

பின்னா், செய்யாற்றில் அமைக்கப்பட்ட பந்தலில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், திரிபுரசுந்தரி சமேத திருமாமுடியீசுவரா் சுவாமிகள் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கலசப்பாக்கம், போளூா், திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், சேத்துப்பட்டு, புதுப்பாளையம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT