திருவண்ணாமலை

நிதி நிறுவன உரிமையாளா் கடத்தல்: 6 போ் கைது

DIN

செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை கடத்திச் சென்ற புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் 6 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவா், சிலருடன் சோ்ந்து அசனமாப்பேட்டை பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி இரவு அவா் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு பைக்கில் பெருங்கட்டூா் - பிரம்மதேசம் சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, ராமச்சந்திரனை பின் தொடா்ந்து காரில் வந்தவா்கள், அவரை தடுத்து நிறுத்தி காரில் கடத்திச் சென்றனா்.

மேலும், கைப்பேசி மூலம் ராமச்சந்திரனின் தம்பியான ரவிச்சந்திரனிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனா்.

இதன் பேரில் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா்.

எதிரிகளை கைது செய்ய இரு தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

இதனிடையே, அந்தக் கும்பல் ராமச்சந்திரனை புதூா் பாலம் அருகே இறக்கி விட்டோம் எனத் தெரிவித்து விட்டு மாயமாகினா்.

இந்த நிலையில், இரு தனிப்படை போலீஸாா், சம்பவத்தில் தொடா்புடையவா்கள் எனக் கூறப்படும் ராணிப்பேட்டை மாவட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்த பிரபாகான் ( 31), ரமேஷ் (37), சிறுகரும்பூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திர பிரசாத் (27), காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தைச் சோ்ந்த தமிழரசன் (24), விக்னேஷ் (24), காா் ஓட்டுநா் மோகன்ராஜ் (25) ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸாரின் விசாரணையில் ராமச்சந்திரனுக்கும், பிரபாகரன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக தகராறு இருந்து வந்ததது தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

மோடி கூட்டம்: ஒரே மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்!

அமித்ஷாவைக் கிண்டலடித்தாரா அஸ்வின்?

10 ஆண்டுகளுக்குப் பிறகு.. முக்கிய தொகுதியில் களமிறங்கும் திமுக

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சேலத்தில் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT