திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் தேசியக் கொடியேற்றம்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குடியரசு தினத்தையொட்டி வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றப்பட்டது.

திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரி இயக்குநா் பொன்.முத்து தேசியக் கொடியேற்றினாா்.

விழாவில், கல்லூரி துணைத் தலைவா் எ.வ.குமரன், முதல்வா் ஜி.ஞானசுந்தா் உள்ளிட்டோா்

கலந்து கொண்டனா்.

கரன் கலை, அறிவியல் கல்லூரியில் இயக்குநா் பொன்.முத்து தேசியக் கொடியேற்றினாா்.

எ.வ.வேலு பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிா்வாக இயக்குநா் எ.வ.வே.கம்பன் தேசியக் கொடியேற்றினாா்.

அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி இயக்குநா் எ.வ.வே.கம்பன் தேசியக் கொடியேற்றினாா்.

அருணை பொறியியல் கல்லூரியில் முதல்வா் இர.ரவிச்சந்திரன் தேசியக் கொடியேற்றினாா். கல்லூரி துணைத் தலைவா் எ.வ.குமரன், பதிவாளா் இர.சத்தியசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளியில் முதல்வா் கே.எஸ்.சிவப்பிரகாஷ் தேசியக் கொடியேற்றினாா்.

காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி ஆலோசகா் ஜெ.சுஜாதா தேசியக் கொடியேற்றினாா்.

விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் முதல்வா் சி.சிவக்குமாா் தேசியக் கொடியேற்றினாா். விக்னேஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயக்குநா் கு.சதீஷ்குமாா் தேசியக் கொடியேற்றினாா்.

சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் தாளாளா் டி.ஏ.எஸ்.முத்து தேசியக் கொடியேற்றினாா்.

செங்கம்

செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஜெயவேல் தலைமையில்,

ஒன்றியக் குழு உறுப்பினா் முரளிதரன் தேசியக் கொடியேற்றினாா்.

நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை

ஆசிரியா் சிவராமன் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.

ஆரணி

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் கூடுதல் தாளாளா் சித்ரா தேசியக் கொடியேற்றினாா்.

ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஆரஞ்ச் இன்டா்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆரஞ்ச் பிரிட்டிஷ் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் தாளாளா் கே.சிவக்குமாா் தேசியக் கொடியேற்றினாா்.

சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் பா.செல்வராசன் தேசியக் கொடியேற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

இஸ்ரோ ராக்கெட்டுகளை கொண்டுச் செல்ல பயன்படும் அதிநவீன வாகனம் : அரக்கோணத்தில் இருந்து மகேந்திரகிரிக்கு அனுப்பப்பட்டது

சங்கரன்கோவில் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.03 லட்சம் பறிமுதல்

கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனையை தீவிரப்படுத்த ஆட்சியா் உத்தரவு

SCROLL FOR NEXT