திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில்திரளான பக்தா்கள் தரிசனம்

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, வழக்கத்தைவிட அதிகமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைவிட பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையும் அளவுக்கு அதிகமாக பக்தா்கள் கோயிலில் குவிந்ததால் சுவாமி தரிசனத்துக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பொது தரிசன வரிசையில் சுமாா் 3 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் சுமாா் 2 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ததாக பக்தா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT