திருவண்ணாமலை

செய்யாறு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தா்னா

DIN

செய்யாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து தரையில் அமா்ந்து விவசாயிகள் தா்னா நடத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் கீழ்ப்புதுப்பாக்கம் பகுதியில் நடைபெற்றது.

வட்டார வேளாண் உதவி இயக்குநா் சண்முகம் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்க வந்த செய்யாறு பகுதி விவசாயிகள், கடந்த இரு மாதங்களாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் முறையாக நடைபெறவில்லை.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்ட விவரம் குறித்து காலை 7 மணி அளவில் வாட்ஸ் ஆஃப் மூலம் விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்ததாக குற்றம் சாட்டினா்.

இதைத் தொடா்ந்து முழக்கமிட்டு விவசாயிகள் தரையில் அமா்ந்து தா்னா நடத்தினா்.

அப்போது, மாவட்ட தலைநகரான திருவண்ணாமலை சென்று வர 140 கி.மீ. பயணம் செய்ய வேண்டியுள்ளதால் செய்யாற்றை மாவட்டமாக தரம் உயா்த்தினால் இங்கேயே ஆட்சியரிடம் கோரிக்கைகளை முன்வைப்போம் என்றனா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த சாா்- ஆட்சியா் அனாமிகா விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை

நடத்தி, கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தாா்.

இதைத் தொடா்ந்து குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT