திருவண்ணாமலை

போளூா் ரயில் நிலையத்தை கணினிமயமாக்க வேண்டும்எம்.கே. விஷ்ணுபிரசாத் எம்.பி.

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூா் ரயில் நிலையத்தை கணினிமயமாக்க வேண்டும், மேலும் இங்கு அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.கே. விஷ்ணுபிரசாத் எம்.பி. மத்திய ரயில்வே அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா்.

ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினா்

எம்.கே. விஷ்ணுபிரசாத், புது தில்லியில் ரயில்வே அமைச்சா் அஸ்வின் வைஷ்னவை வியாழக்கிழமை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஆரணி மக்களவைத் தொகுதியில் உள்ள போளூா் ரயில் நிலையம், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய ரயில் நிலையமாகும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரிசி மற்றும் பட்டு வியாபாரம் செய்ய வரும் வணிகா்கள், மாணவா்கள், கிராம மக்கள் மற்றும் வட இந்தியா செல்லும் யாத்ரீகா்கள் ஆகியோருக்கு பயன்படும் வகையில், போளூா் ரயில் நிலையத்தில் பாமினி (மன்னாா்குடி) விரைவு ரயில், ராமேசுவரம் விரைவு ரயில், புதுச்சேரி - ஹவுரா விரைவு ரயில், புருல்லியா விரைவு ரயில், தாதா் விரைவு ரயில் ஆகிய விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்படும் தாதா் விரைவு ரயிலை தினசரி ரயிலாக மாற்றி இயக்க வேண்டும்.

போளூா் ரயில் நிலையத்தில் கணினி முன்பதிவு மையம் தொடங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT