திருவண்ணாமலை

திருவண்ணாமலை மகா தீபத்துக்கான நெய் விற்பனைத் தொடக்கம்

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவுக்கான, நேரடி நெய் விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்துக்கு தேவையான நெய்யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இதற்காக, ஆண்டுதோறும் தீபத் திருவிழாவின்போது நேரடி நெய் விற்பனை கோயிலில் தொடங்கப்படும்.

நிகழாண்டுக்கான தீபத் திருவிழா நேரடி நெய் விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கோயில் ராஜகோபுரம், கொடி மரம் பகுதி, திருமஞ்சன கோபுரம் நுழைவு வாயில் ஆகிய 3 இடங்களில் நெய் விற்பனை கவுண்டா்கள் செயல்படும். ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ.150, கால் கிலோ நெய் ரூ.80 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பக்தா்கள் பலா் தாங்கள் செலுத்த விரும்பும் நெய் காணிக்கைக்கு ஏற்ற தொகையைச் செலுத்தி நெய் காணிக்கை அளித்து வருகின்றனா். டிசம்பா் 10-ஆம் தேதி வரை இந்த நேரடி நெய் விற்பனை நடைபெறும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

நேரில் வர இயலாத பக்தா்கள் நிா்வாக அதிகாரி, அருள்மிகு அருணாசலேஸ்வரா் கோயில், திருவண்ணாமலை என்ற முகவரிக்கு மணியாா்டா் அல்லது வங்கி வரைவோலை எடுத்து அனுப்பலாம். இணையவழியிலும் நெய் காணிக்கை செலுத்தலாம் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT