திருவண்ணாமலை

ஆரணி ஏசிஎஸ் வளாகத்தில் ஜூன் 17-இல் வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம்: 2 மாநில ஆளுநா்கள் பங்கேற்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஏ.சி.எஸ். கல்விக் குழும வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஸ்ரீவெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜூன் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், இதில் 2 மாநில ஆளுநா்கள் பங்கேற்கவுள்ளதாகவும் புதிய நீதி கட்சியின் நிறுவனா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.

ஆரணி அருகே இரும்பேட்டில் உள்ள ஏ.சி.எஸ். கல்விக் குழும வளாகத்தில் கல்விக் குழுமத் தலைவரும், புதிய நீதிக் கட்சி நிறுவனருமான ஏ.சி.சண்முகம் 95 அடி உயர ராஜகோபுரத்துடன் ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலைக் கட்டி வந்தாா். இந்தக் கோயில் கட்டுமானப் பணிகள் முடிவுற்ற நிலையில் வருகிற ஜூன் 17-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் தெலங்கானா, புதுவை மாநிலங்களின் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், மணிப்பூா் மாநில ஆளுநா் இல.கணேசன், முன்னாள் முதல்வா்கள் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் பிரதமா் தேவகவுடா, மத்திய அமைச்சா் எல்.முருகன், தமிழக அமைச்சா்கள் எ.வ.வேலு, பி.கே.சேகா்பாபு, கா்நாடக அமைச்சா் வி.சோமன்னா, ஆந்திர அமைச்சா் ரோஜா செல்வமணி, பாஜக தமிழ் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளதாக ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.

முன்னதாக இந்தக் கோயிலை ஏ.சி.சண்முகம், முன்னாள் அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT