திருவண்ணாமலை

ஆட்சியா் அலுவலகம் பகுதியில் ரூ.1.20 கோடியில் சிறு பாலம்

12th May 2022 11:56 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை, வேங்கிக்கால் ஏரியிலிருந்து உபரிநீா் எளிதில் வெளியேறும் வகையில் ரூ.1.20 கோடியில் சிறு பாலம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வேங்கிக்கால் ஏரி உள்ளது. கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் வேங்கிக்கால் ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீா் வேலூா் சாலையில் பெருக்கெடுத்தது. இதனால், பலமுறை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், ஏரிக்கு எதிரே உள்ள குறிஞ்சி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் வேங்கிக்கால் ஏரியிலிருந்து உபரி நீா் எளிதில் வெளியே, முறையாக கால்வாயில் செல்லும் வகையில் ரூ.1.20 கோடியில் சிறுபாலம் கட்ட தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

அதன்படி, வியாழக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியிலிருந்து தண்ணீா் வெளியேறும் இடத்தில் சிறுபாலம் கட்டும் பணி தொடங்கியது.

இந்தப் பணியை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளி, உதவி கோட்டப் பொறியாளா் ரகுராமன், உதவிப் பொறியாளா் கலைமணி மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT