திருவண்ணாமலை

சாலை விபத்தில் டேங்க் ஆபரேட்டா் பலி

29th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா் பலியானாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமாவந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (55). மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், திங்கள்கிழமை அதிகாலை நீரேற்றும் நிலையத்துக்குச் செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

நமண்டி கூட்டுச் சாலை அருகே சென்றபோது,

ADVERTISEMENT

அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த தூசி போலீஸாா் முருகனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT