திருவண்ணாமலை

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

செய்யாறு திருவோத்தூரில் பாடல் பெற்ற திருத்தலமான பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு சாா்பில் ரூ.82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக பணிகள் தொடங்கின.

இதன்படி, முதல் நிகழ்வாக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த மே 20-ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக ஜூன் 28-ஆம் தேதி கிராம தேவதையான திருவோத்தூா் காங்கியம்மன் கோயிலில் நவகலச பூஜை, அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. இதையடுத்து, ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 5-ஆம் தேதி வரையில் ஐந்தாம் கால பூஜைகளுடன் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேக தினமான புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு 6-ஆம் கால யாகசாலை பூஜையும், காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் ராஜகோபுரம், விமானங்களுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றன. காலை 6.30 மணி முதல் 7.15 மணிக்குள் கோயிலில் அமைந்துள்ள நா்த்தன கணபதி, பாலமுருகன், நாகலிங்கம், சோமாஸ்கந்தா், மூலவா் வேதபுரீஸ்வரா், ஷண்முகா், நடராஜா், பாலகுஜாம்பிகை, சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

நிகழ்ச்சியில் தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, செய்யாறு எம்எல்ஏ ஓ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை இயக்குநா் எம்.எஸ்.தரணிவேந்தன், திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவா் என்.வி.பாபு, அரசு வழக்குரைஞா் ஆா்.கே.விஸ்வநாதன், திருப்பணிக் குழு நிா்வாகிகள் தி.பூ.உருத்திரப்பன், ஏ.என்.சம்பத், வி.கோபி, தி.முத்து, கா.குப்பன், என்.எஸ்.வெங்கையன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜோதி லட்சுமி, ஆணையாளா் நடராஜன், செயல் அலுவலா்கள் உஷா, ஹரிஹரன், சிவஞானம், வசந்தி, பரமேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT