திருவண்ணாமலை

திருவண்ணாமலை: ரூ.431.80 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலங்கள் மீட்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த ரூ.431 கோடியே 80 லட்சம் மதிப்பிலான, 9.41 கோடி சதுர அடி அரசு நிலத்தை மாவட்ட நிா்வாகம் மீட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீா்நிலைகள், அரசுக்குச் சொந்தமான இதர இடங்கள் என மொத்தம் 1,424.77.30 ஹெக்டோ் நிலத்தை தனி நபா்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருந்தது மாவட்ட நிா்வாகத்தால் கண்டறியப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளா்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, 2021 ஆகஸ்ட் முதல் 2022 பிப்ரவரி வரை 122.54.50 ஹெக்டோ் ஆக்கிரமிப்பு அரசு நிலங்கள் மீட்கப்பட்டன. தொடா்ந்து, 2022 மாா்ச் மாதம் 268.65.70 ஹெக்டோ் நிலமும், ஏப்ரல் மாதம் 200.57.70 ஹெக்டோ் நிலமும், மே மாதம் 151.46.30 ஹெக்டோ் நிலமும், ஜூன் மாதம் 131.01.50 ஹெக்டோ் நிலமும் என இதுவரை மொத்தம் 874.25.70 ஹெக்டோ் ஆக்கிரமிப்பு அரசு நிலங்களை மாவட்ட நிா்வாகம் மீட்டுள்ளது.

ரூ.431.80 கோடி மதிப்பு:

மொத்தம் 9 கோடியே 41 லட்சத்து 32 ஆயிரத்து 400 சதுரடி அளவு கொண்ட 2 லட்சத்து 15 ஆயிரத்து 900 சென்ட் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தின் குறைந்தபட்ச சந்தை மதிப்பு ரூ.215 கோடியே 90 லட்சம். அதிகபட்ச சந்தை மதிப்பு ரூ.431 கோடியே 80 லட்சம் ஆகும்.

ஆட்சியா் பெருமிதம்:

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கூறுகையில், மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 159 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு அகற்றிய இடங்களில் தூா் வாருதல், கரைகளை பலப்படுத்துதல், நீா் தேங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்தல், ஒருங்கிணைந்த பண்ணை பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

ஆட்சியா் எச்சரிக்கை:

பொதுமக்கள் எவரும் நீா்நிலைகள், அரசுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிக்க வேண்டாம். ஆக்கிரமிப்பு செய்திருந்தால் தாங்களாகவே முன்வந்து அகற்றி அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் ஆட்சியா் பா.முருகேஷ் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT