திருவண்ணாமலை

திருவண்ணாமலை:பள்ளிப் பேருந்துகளின் தகுதி ஆய்வு

DIN

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற 439 பள்ளிப் பேருந்துகளின் தகுதி ஆய்வின்போது, 47 பேருந்துகளில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற பேருந்துகளின் ஆய்வுப் பணியை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தொடக்கிவைத்தாா்.

மேலும், ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட பேருந்துகளை அவா் இயக்கி சோதனையிட்டாா்.

இதுதவிர, பேருந்துகளில் முதலுதவிப் பெட்டிகள் உள்ளனவா, பேருந்துப் படிக்கட்டுகள் சிறப்பான மற்றும் பாதுகாப்பான முறையில் உள்ளனவா, வாகன ஓட்டிகள் சாலை விதிகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்குகிறாா்களா என்பதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, பள்ளிப் பேருந்துகள் தீப் பிடிக்கும் நிலை ஏற்பட்டால் அதே எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை தீயணைப்புத் துறையினா் செயல்முறை விளக்கம் அளித்தனா். விபத்து சமயங்களில் எடுக்கப்பட வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித்த செயல்முறை விளக்கத்தை 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள் செய்து காண்பித்தனா்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட 439 பள்ளிப் பேருந்துகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இவற்றில் 47 பேருந்துகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்தக் குறைபாடுகளை சரிசெய்த பிறகு மீண்டும் கூட்டாய்வுக்கு பேருந்துகளை எடுத்து வர வேண்டும் என்று திருப்பி அனுப்பினா்.

ஆய்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (திருவண்ணாமலை) ஆ.குமரா, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ஆா்.பெரியசாமி, முருகவேல், சுந்தர்ராஜன், கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல், தீயணைப்புத் துறை அலுவலா்கள், பள்ளிக்கல்வித் துறை அலுவலா்கள், காவல் துறையினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT