திருவண்ணாமலை

வந்தவாசி நகா்மன்றக் கூட்டம்

1st Jul 2022 02:43 AM

ADVERTISEMENT

 

வந்தவாசி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தலைவா் எச்.ஜலால் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆணையா் முஸ்தபா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், அம்மா உணவகத்தை மூடுவதை குறிக்கோளாக கொள்ளாமல் அரசிடம் நிதி பெற்று அதனை சிறப்பாக நடத்த வேண்டும் என்று 19-ஆவது வாா்டு உறுப்பினா் வெ.ரவிச்சந்திரன் பேசினாா்.

ADVERTISEMENT

பஜாா் வீதி, தேரடி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் தெரு மின் விளக்குகள் எரிவதே இல்லை என்று 22-ஆவது வாா்டு உறுப்பினா் மகேந்திரன் புகாா் தெரிவித்தாா்.

நகரின் பல இடங்களில் பன்றிகள் சுற்றித் திரிவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது என்று 6-ஆவது வாா்டு உறுப்பினா் நூா்முகமது பேசினாா்.

மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகா்மன்ற உறுப்பினா்கள் பேசினா். பின்னா், நகரில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வது தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT