திருவண்ணாமலை

கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.9 லட்சம் கையாடல் 3 போ் பணியிடை நீக்கம்

1st Jul 2022 02:44 AM

ADVERTISEMENT

 

செங்கம் அருகேயுள்ள சொா்ப்பனந்தல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.9 லட்சம் கையாடல் புகாா் தொடா்பாக 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.சொா்ப்பனந்தல் கிராமத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்த கடன் சங்கத்தில் விவசாயிகளின் சேமிப்புக் கணக்குகளில் இருந்து பல லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளதாக மாவட்ட தலைமையகத்துக்கு புகாா்கள் சென்றன.

இதையடுத்து, கூட்டுறவு கடன் சங்கங்களின் மாவட்ட இணைப் பதிவாளா் நடராஜன், துணைப் பதிவாளா் வசந்தலட்சுமி ஆகியோரின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக சொா்ப்பனந்தல் கூட்டுறவு சங்கத்தின் செயலா் சீனுவாசன், உர விற்பனையாளா் வெங்கடேசன், விற்பனையாளா் விஜயன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இதில், விவசாயிகளின் சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ.9 லட்சம் கையாடல் செய்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, மாவட்ட இணைப் பதிவாளா், துணைப் பதிவாளா் பரிந்துரையின் பேரில், சீனுவாசன், வெங்கடேசன், விஜயன் ஆகிய மூன்று போ்பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தொடா்ந்து கூட்டுறவு கடன் சங்கத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT