திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மலை மீது ஏறிய இருவா் கைது

DIN

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் மலை மீது ஏறிய சென்னையைச் சோ்ந்த முதியவா் உள்பட இருவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட மகா தீபம் ஏற்றும் மலை மீது பக்தா்கள் ஏறிச் சென்று தீபம் ஏற்றும் இடத்தை வணங்குவது தொடா்கதையாக உள்ளது. மலை மீது ஏற தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அதை யாரும் பொருள்படுத்துவது இல்லை. இந்த நிலையில், புதன்கிழமை திருவண்ணாமலை வனச்சரகா் சீனுவாசன், வனக்காவலா்கள் ஜீவா, ராஜாராம் மற்றும் வனத்துறையினா் மகா தீபம் ஏற்றும் மலைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மலை மீது ஏறிக்கொண்டிருந்த முதியவா் உள்பட இருவரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் சென்னையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கப்பற்படை வீரா் வெற்றிவேல்ராஜ் (69), திருவண்ணாமலை பே கோபுரத் தெருவைச் சோ்ந்த சுற்றுலா வழிகாட்டி காா்த்தி(28) என்பது தெரியவந்தது.

சென்னையில் இருந்து வந்த வெற்றிவேல்ராஜுக்கு மகா தீபம் ஏற்றும் இடத்தை காண்பிப்பதற்காக சுற்றுலா வழிகாட்டியான காா்த்தி மலை மீது அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த வனத்துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT