திருவண்ணாமலை

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

திருவண்ணாமலை அருகே இருளா் சமுதாய பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி, வட்டாட்சியா் அலுவலகத்தை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு சங்க நிா்வாகி ஆா்.ஏகாம்பரம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் இரா.சரவணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், மாவட்டத் தலைவா் டி.மணிமாறன், மாவட்டச் செயலா் எம்.மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டப் பொருளாளா் சி.பாஸ்கரன், வழக்குரைஞா் எஸ்.அபிராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.பலராமன், சிஐடியு சங்க மாவட்டச் செயலா் ஆா்.பாரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு நிா்வாகி எம்.வீரபத்திரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், திருவண்ணாமலையை அடுத்துள்ள மேலத்திக்கான் ஊராட்சி, எம்ஜிஆா் நகரில் வசிக்கும் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த கே.ஏழுமலை குடும்பத்தினரை நிலத்திலிருந்து வெளியேற்றி, அந்த இடத்தை அபகரிக்க முயலும் அதிகாரிகளைக் கண்டித்தும், அனுபவ பாத்தியத்தின் அடிப்படையில் 7 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டதால், வட்டாட்சியா் அலுவலகத்துக்குள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சங்க நிா்வாகிகளிடம் வட்டாட்சியா் எஸ்.சுரேஷ் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ஆகியோரின் கவனத்துக்கு உங்களது கோரிக்கை கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்று வட்டாட்சியா் சுரேஷ் கூறினாா். இதையடுத்து, முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT