திருவண்ணாமலை

குடிநீா்த் தொட்டிகள் திறப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சிக்குள்பட்ட 7-ஆவது வாா்டில் மொத்தம் ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுடன் கூடிய 2 புதிய சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டிகளிலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவைக்கப்பட்டது.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 7-ஆவது வாா்டுக்குள்பட்ட நெமந்தகார தெரு, துலுக்கானத்தம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மொத்தம் ரூ.5 லட்சம் செலவில் ஆழ்துளைக் கிணறுடன் கூடிய தலா 1,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட 2 புதிய சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்த குடிநீா்த் தொட்டிகளிலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தண்ணீரை நகராட்சி ஆணையா் (பொ) டி.கே.சரவணன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா் (படம்).

நிகழ்ச்சிக்கு 7-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ரதிகாந்தி வரதன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் து.வரதன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் அம்பிகா மேகநாதன், ரிஹானா சையத்அப்துல்கறீம், ச.நூா்முகமது, தீபா செந்தில்குமாா், பா.சரவணகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

SCROLL FOR NEXT