திருவண்ணாமலை

ஏடிஎம்மில் பணம் எடுத்துத் தர உதவுவது போல நடித்து ரூ.1.34 லட்சம் திருட்டு: இளைஞா் கைது

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஏடிஎம்மில் பணம் எடுத்துத் தர உதவுவது போல நடித்து ரூ.1.34 லட்சத்தை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த நல்லேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை(65). கடந்த நவ. 23-ஆம் தேதி வந்தவாசி தேரடி காந்தி சிலை அருகேயுள்ள தனியாா் வங்கி ஏடிஎம் மையத்துக்குச் சென்ற இவா், அங்கிருந்த இளைஞா் ஒருவரிடம் தனது ஏடிஎம் அட்டையைக் கொடுத்து ரூ.10 ஆயிரம் பணம் எடுத்துத் தருமாறு கூறினாா்.

இதையடுத்து, ஏடிஎம்மிலிருந்து ரூ.10 ஆயிரத்தை எடுத்து ஏழுமலையிடம் கொடுத்த அந்த நபா், ஏற்கெனவே தன்னிடமிருந்த போலி ஏடிஎம் அட்டையை அவரிடம் கொடுத்து அனுப்பிவிட்டாா்.

பின்னா் அந்த நபா் ஏழுமலையின் ஏடிஎம் அட்டை மூலம் வெவ்வேறு ஊா் ஏடிஎம்களிலிருந்து ரூ.1.34 லட்சம் திருடியுள்ளாா்.

இதுகுறித்து ஏழுமலைக்கு தாமதமாக தெரிய வந்தது. இதையடுத்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், ஏடிஎம்மிலிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை சன்னதி தெரு வழியாக போலீஸாா் ரோந்து சென்றபோது, அங்கு தனியாா் வங்கி ஏடிஎம் முன் நின்றிருந்த இளைஞரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினா்.

இதில் அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா்.

இதில் அந்த இளைஞா் கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்துக்கு உள்பட்ட தோகைமலையைச் சோ்ந்த காட் ஜான்(21) என்பதும், ஏழுமலையின் ஏடிஎம் அட்டை மூலம் ரூ.1.34 லட்சம் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, காட் ஜானை கைது செய்த வந்தவாசி தெற்கு போலீஸாா் அவரிடமிருந்து ரூ.86 ஆயிரத்து 500 மற்றும் 5 ஏடிஎம் அட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மேலும், காட் ஜான் மீது புதுக்கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு ஏடிஎம் அட்டை மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT