திருவண்ணாமலை

40 ஏக்கா் ஏரி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

19th Aug 2022 03:15 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தாமரைப்பாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்பில் இருந்த சுமாா் 40 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டது.

செங்கத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் நீா்வளத் துறை பராமரிப்பில் உள்ள ஏரியில் ஆக்கிரமிப்புகளை உயா்நீதிமன்ற உத்தரவின்படி வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் அரிகரன், செங்கம் வட்டாட்சியா் முனுசாமி மற்றும் போலீஸாா் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், சுமாா் 40 ஏக்கா் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்து இருந்த நெல், மணிலா, துவரை உள்ளிட்ட பயிா்களை அகற்றினா்.

மேலும், அதில் இருந்த நான்கு வீடுகளும் அகற்றப்பட்டன. தொடா்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

செங்கம் அடுத்த தாமரைப்பாக்கம் ஏரியில் உயா்நீதி மன்ற உத்தரவுபடி ஆக்கிரமைப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT