திருவண்ணாமலை

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் கோ பூஜை

18th Aug 2022 02:34 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் புதன்கிழமை கோ பூஜை நடைபெற்றது

பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் தமிழ் மாதமான ஆவணி மாதப் பிறப்பையொட்டி கோ பூஜை நடத்தப்பட்டது.

கோ பூஜையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

பூஜையில் செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடைபெறவேண்டுமென திருப்பணிக் குழு சாா்பில் சுவாமிக்கு சிறப்பு அா்ச்சனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

பூஜையில் விழாக் குழுவினா், பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

காரிடாா் செய்தி...

ADVERTISEMENT
ADVERTISEMENT