திருவண்ணாமலை

சேத்துப்பட்டில் கருப்பு நாள் கண்டனப் பேரணி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் வேலூா் மறை மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் சாா்பில் கருப்பு நாள் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்க மத்திய அரசை வலியுறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10-ஆம் நாள் கருப்பு நாள் கண்டனப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

நிகழாண்டு சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில்,

சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை தேவாலயத்திலிருந்து நூற்றுக்கணக்கான தலித் கிறிஸ்தவா்கள், அருட்தந்தையா்கள், அருட்கன்னியா்கள், தலித் அமைப்புகள், மற்றும் இஸ்லாமியா்கள் கையில் பதாதைகளுடன் கருப்பு பேட்ச், கொடியுடன் கண்டன முழக்கத்துடன் போளூா் சாலை வழியாக வந்தவாசி சாலை, காமராஜா் சிலை அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத் திடலை அடைந்தனா்.

பேரணியில், சேத்துப்பட்டு பேரூராட்சித் தலைவா் சுதா முருகன், துணைத் தலைவா் திலகவதி செல்வராஜன், அதிமுக நகரச் செயலா் எம்.ஜி.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினா் ஜி.முனிரத்தினம் ஆகியோா் கலந்து கொண்டு ஆதரவு குரல் எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு வேலூா் மறை மாவட்ட பரிபாலகா் ஜான் ராபா்ட் தலைமை வகித்தாா்.

வேலூா் மறை மாவட்ட தலித் பணிக்குழுச் செயலா் லாரன்ஸ், அருட்தந்தையா்கள் லியோ மரிய ஜோசப், ஞானசேகா், சத்தீஷ் ராஜ், ஆனந்தராஜ், ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ்.சி, எஸ்.டி பணிக் குழு பாபு சின்னப்பன் வரவேற்றாா்.

பொதுக் கூட்டத்தில் சி.எஸ்.ஐ. திருச்சபை வேலூா் அய்சக் கதிா்வேலு எழுச்சியுரையாற்றினாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் பகலவன் (எ) பாஸ்கரன், திமுக நகரச் செயலா் இரா.முருகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

வேலூா் மறை மாவட்ட பரிபாலகா் ஜான் ராபா்ட் சிறப்புரையாற்றினாா்.

கண்டன ஆா்ப்பாட்டத்தில் சேத்துப்பட்டு, லூா்து நகா், நிா்மலா நகா், தேவிகாபுரம், பத்தியாவரம், முடையூா், தச்சாம்பாடி, நரசிங்கபுரம், கொங்காபுரம், வந்தவாசி, போளூா், ஆரணி, வேலூா், ராணிப்பேட்டை, அரக்கோணம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து திரளான தலித் கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

நிறைவில் எஸ்.சி., எஸ்.டி பணிக்குழு மாநில துணைச் செயலா் அனிதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT