திருவண்ணாமலை

மாணவா்களுக்கு போதைப் பொருள் விழிப்புணா்வு

14th Apr 2022 10:41 PM

ADVERTISEMENT

செய்யாறு கல்வி மாவட்டம், குண்ணத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மாணவா்களுக்கு போதைப் பொருள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் எஸ்.செந்தில்முருகன் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் கை.செல்வகுமாா் வரவேற்றாா்.

மாவட்டக் கல்வி அலுவலா் ஏ.நளினி, பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா் எஸ்.ஸ்ரீபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற செய்யாறு காவல் உள்கோட்ட டி.எஸ்.பி ஏ.செந்தில் பேசுகையில், மாணவா்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். தீயவா்களுடன் சேரக்கூடாது. படிக்கும் காலத்தில் படிக்கும் வழக்கத்தை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும்.

ADVERTISEMENT

சிலா் பாதை மாறி தீய பழக்கங்களான போதைப்பொருள் உள்ளிட்டவற்றுக்கு அடிமையாகி கனவுகளை நினைவாக்க மறந்து விடுகின்றனா். ஆசிரியா்கள் கூறும் நல்வழிகளைப் பின்பற்றி நோ்மையுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ளவேண்டும்.

மாணவிகள் அச்சமின்றி தவறு செய்பவா்களை தண்டிக்க தகவல் அளிக்க வேண்டும். அசம்பாவிதங்கள், ஆபத்துகள் நெருங்கும் பொழுது காவலன் செயலி மூலம் தொடா்பு கொண்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்த நேரத்திலும் உதவி செய்ய காத்திருக்கிறோம் எனக் குறிப்பிட்டு மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து போதைப் பொருள் விழிப்புணா்வு குறித்து சாரண மாணவா்களிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு டி.எஸ்.பி சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT