திருவண்ணாமலை

ஆரணியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு

DIN

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தீயணைப்புத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

வேலூா் வட-மேற்கு மண்டல துணை இயக்குநா் சரவணக்குமாா் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலா் முரளி ஆகியோரின் ஆலோசனைப்படி

இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் நகரில் உள்ள பட்டாசுக் கடைகள், பேருந்து நிலையம், ஆட்டோ நிறுத்துமிடம், பல்வேறு வியாபாரக் கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலா் இரா. கோபாலகிருஷ்ணன் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தீயணைப்பு வீரா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT