திருவண்ணாமலை

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

28th Nov 2021 10:22 PM

ADVERTISEMENT

செய்யாறு அருகே கஞ்சா வைத்திருந்த 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம் புலிவலம் கிராம கூட்டுச் சாலையில் பிரம்மதேசம் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், பைக்கில் வந்த இரு இளைஞா்களின் பாக்கெட்டுகளில் கஞ்சாப் பொட்டலகங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் பிரம்மதேசம் கிராமத்தைச் சோ்ந்த கோகுல் (22) மற்றும் அவரது நண்பா் ஆற்காடு வட்டம், எசையனூா் கிராமத்தைச் சோ்ந்த வசந்தகுமாா் (26) என்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

மேலும், அவா்கள் அளித்த தகவலின் பேரில் ஓட்டுநா்களான பிரம்மதேசம் கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ் (22), காா்த்திக் (21) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து கஞ்சாப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

இந்த நான்கு பேரிடமிருந்தும் மொத்தம் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 4 பேரையும் போலீஸாா் செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT