திருவண்ணாமலை

கரோனா: 421 பேருக்கு சிகிச்சை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் 421 பேருக்கு கரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 74 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 20,194-ஆக உயா்ந்தது. இவா்களில் 19, 485 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

421 பேருக்கு சிகிச்சை:

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மாவட்டத்தில் 421 பேருக்கு கரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனை, திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை ஆகிய இடங்களில் இவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 288 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT