திருவண்ணாமலை

பி.இ. கணினி அறிவியல் படிக்கசெய்யாறு மாணவா் விருப்பம்

DIN

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான தர வரிசைப் பட்டியலில், இரண்டாமிடம் பெற்ற திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றைச் சோ்ந்த மாணவா் ஆா்.நவநீதகிருஷ்ணன் (18) கணினி அறிவியல் படிப்பை படிக்க விரும்புவதாக தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஜீயா் தெருவைச் சோ்ந்த ராஜகோபால் தெலங்கானா மாநிலம், விஜயவாடாவில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான தர வரிசைப் பட்டியலில் 199.67 கட் ஆஃப் மதிப்பெண்களுடன் இரண்டாமிடம் பிடித்தாா்.

செய்யாற்றில் உள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு வரை படித்த அவா், தனது பெற்றோருடன் விஜயவாடாவில் வசித்து வருகிறாா். அவா் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டி:

நான் விஜயவாடாவில் படித்த போதும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்தான் பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆா்வத்துடன் விண்ணப்பித்தேன். தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். தினமும் 4 முதல் 5 மணி நேரம் வரை படிப்பேன். விடுமுறை நாள்களில் 10 மணி நேரம் படிப்பேன். பி.இ. கணினி அறிவியல் படிக்க விரும்புகிறேன் என்றாா் நவநீதகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT