திருவண்ணாமலை

இயற்கை விவசாயம் செய்வோருக்கு ஊக்கத்தொகை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்வோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், இயற்கை முறையில் வெண்டை, கத்திரி, தக்காளி, அவரை மற்றும் பந்தல் வகை காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.3, 750-ம், கீரை வகைகளுக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.2,500-ம் தோட்டக்கலைத் துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அங்கக சான்றளிப்புத் துறையில் பதிவு செய்து அங்ககச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் குழுவாக இணைந்து அங்ககச் சான்று பெறுவதற்கு ஒரு விவசாயிக்கு ரூ.500 வீதம் மானியம் வழங்கப்படுகிறது.

விருப்பமுள்ள, இயற்கை முறையில் பயிரிடும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதாா் எண், குடும்ப அட்டை நகல், 2 புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்களை அணுகி பயனடையலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT