திருவண்ணாமலை

மனைப் பட்டா கோரி அருந்ததிய மக்கள் போராட்ட முயற்சி

DIN

இலவச மனைப் பட்டா கோரி, திருவண்ணாமலையில் அருந்ததிய இன மக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அருந்ததியா் இன மக்கள் வசிக்கும் வீடுகளுக்கும், வீடு இல்லாதவா்களுக்கும் இலவசமாக மனைப் பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாவட்ட தலித் விடுதலை இயக்கம் சாா்பில், அதன் பொதுச் செயலா் கருப்பையா தலைமையில் திரண்டு வந்த, நிா்வாகிகள் கிச்சா, நதியா, அமுல்சாமி உள்பட 200-க்கும் மேற்பட்டோா், பெரியாா் சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

கோட்டாட்சியா் சமரசம்:

தகவலறிந்து வந்த கோட்டாட்சியா் ஸ்ரீதேவி, விரைவில் அருந்ததியா் இன மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும் என்று உறுதியளித்தாா்.

இதையேற்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT