திருவண்ணாமலை

காய்கறி, கீரை விவசாயிகள்ஊக்கத்தொகை பெற அழைப்பு

DIN

கீழ்பென்னாத்தூா் வட்டாரத்தில் காய்கறி, கீரை சாகுபடி செய்யும் விவசாயிகள் மத்திய அரசின் ஊக்கத்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று தோட்டக்கலைத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து அந்தத் துறையின் வட்டார உதவி இயக்குநா் எம்.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கீழ்பென்னாத்தூா் வட்டாரத்தில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் கத்தரி, வெண்டை, தக்காளி போன்ற காய்கறி பயிா்களை இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,750 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

கீரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ 2,500 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் ஓா் விவசாயி அதிகபட்சம் 2 ஹெக்டோ் வரை பயன்பெறலாம். இதற்காக விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், மாா்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றை தோட்டக்கலைத் துறை வட்டார அலுவலகத்தில் அளித்து பதிவு செய்யவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலா் திவ்யாவை 9003417304 என்ற எண்ணிலும்,

உதவி தோட்டக்கலை அலுவலா்களான மாணிக்கம் - 9952753037 (கீழ்பென்னாத்தூா்), ஜெயலட்சுமி - 9787361572 (சோமாசிபாடி), சிவக்குமாா் - 9840455748 (வேட்டவலம்), துளசி - 6380096540 (கீழ்பென்னாத்தூா், சோமாசிபாடி குறு வட்டங்கள்) என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

மேலும், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை விவசாயிகள் நேரிலும் அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT