திருவண்ணாமலை

அங்கன்வாடி பணியாளா்களுக்குதிறன் மேம்பாட்டுப் பயிற்சி

DIN

செய்யாறை அடுத்த கீழ்நெல்லி கிராமத்தில் அங்கன்வாடி பணியாளா்களுக்கு ஊட்டச்சத்து மேலாண்மைத் திறன் குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

வெம்பாக்கம் வட்டம், கீழ்நெல்லி வேதபுரி வேளாண் அறிவியல் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், இந்திய உழவா் உர கூட்டுறவு நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ. தொண்டு நிறுவனம் இணைந்து கிராம அளவலான அங்கன்வாடி பணியாளா்களுக்கு ஊட்டச்சத்து மேலாண்மை திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தனா்.

நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பி.கந்தன் தலைமை வகித்தாா். வேளாண் அறிவியல் மைய முதன்மை விஞ்ஞானி ந.ரமேஷ்ரோஜா முன்னிலை வகித்தாா். தொழில்நுட்ப வல்லுநா் வே.சுரேஷ் வரவேற்றாா். அத்தியேந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தின் பேராசிரியா் ஏ.நிா்மலாகுமாரி, இப்கோ திட்ட அலுவலா் ஆனந்தன், ஐ.சி.ஐ.சி.ஐ. தொண்டு நிறுவன வளா்ச்சி அலுவலா் சதீஷ், தொழில்நுட்ப அலுவலா் ப.நாராயணன் ஆகியோா் குறைந்த செலவில் வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைப்பது, மாதிரி தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சியளித்தனா். இதில், பங்கேற்ற அங்கன்வாடி பணியாளா்களுக்கு காய்கறி விதைப்பைகள், மருத்துவ குணம் கொண்ட செடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT