திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் விநாயகா், சந்திரசேகரா் பவனி

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், காா்த்திகை தீபத் திருவிழாவின் 4-ஆம் நாளான திங்கள்கிழமை விநாயகா், சந்திரசேகரா் பவனி நடைபெற்றது.

முன்னதாக, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகா், சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து ஐந்தாம் பிரகாரத்துக்கு கொண்டு வரப்பட்டு தயாா் நிலையில் இருந்த வாகனங்களில் விநாயகா், சந்திரசேகரா் எழுந்தருளினா். அப்போது சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது, சுவாமியை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் விநாயகா், சந்திரசேகா் பவனி நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து, இரவு 9 மணிக்கு கோயில் வளாகத்தில் பஞ்சமூா்த்திகள் வெள்ளி விமானத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

கரோனா தொற்று காரணமாக சுவாமி வீதியுலாவில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

எனினும், கோயிலில் இணையவழியில் அனுமதிச்சீட்டு பெற்று 5 ஆயிரம் பேரும், பொது தரிசனம் மூலம் 3 ஆயிரம் பேரும் தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT